பிளாக்செயின் தொழில்நுட்பத்தினால் எதை அடைய முடியும் என்பதைப் பற்றிய ஒரு பார்வையை கற்பிப்பதற்கும் வழங்குவதற்கும் எர்கோ மேனிஃபெஸ்டோ நம்புகிறது. உழைப்பு, வர்த்தகம், பரிமாற்றம், ஒற்றுமை மற்றும் பரஸ்பர உதவி ஆகியவற்றின் கீழ் உற்பத்தி மூலமும் கிடைமட்ட ஒத்துழைப்பு மூலமாகவும் சமூகத்தை கட்டி எழுப்பலாம் என நாங்கள் நம்புகிறோம்.
அடிப்படைக் கொள்கைகளை சரியாக பேணும்போது இது அனைத்து மக்களின் நல்வாழ்வுக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம் மேலும், அடிப்படைக் கொள்கைகள் தொழில்நுட்ப திறன் வளர்ச்சி அடையும் போதும் மனித உரிமைகள் மற்றும் மனித மதிப்புகளுக்கு அமைவாக பராமரிக்கப்பட வேண்டும். கட்டமைக்கப்பட்ட கண்காணிப்பு கருவிகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளில் மனிதர்களை அடிபணிய வைப்பதை விட மனித மதிப்பை வளப்படுத்துதல் வேண்டும்.
இந்த நாட்களில் பிளாக் செயின் பற்றிய தகவல் வங்கி X அல்லது A என சொல்லப்படுகின்றது. செலவுகளை குறைப்பதற்காக நிறுவனம் Y ஆனது ஒரு பிளாக் செய்வினை பயன்படுத்தும்.
பெரிய வங்கியாளர்கள் இந்த புஷ் வேர்டு ஒரு கருவி என நினைக்கின்றார்கள் வேலைகளை இலகுவாக செய்வதற்கும் வேலைகளை குறைப்பதற்கு
நிகழ்நிலைப் பயனாளர்களை பற்றி நான் ஆரம்பத்தில் கண்டறிந்த விடயம் இதுதான்.
• கிரிப்டோகரன்சி சாதாரண மக்களை பலப்படுத்துவதற்கான வழிமுறைகளை வழங்குதல் வேண்டும். சிறு வணிகங்கள் பெரிய தனி தனிமனிதனாக்கப்பட்ட நிதி மூலதனம் அல்ல. • இது எனது கனவு இதுவே என்னை ஈர்த்தது.
பரந்த சமூகத்தின் பார்வையில் கிரிப்டோகரன்சி இன் கருவிகள் வணிக அளவுகள், புவியியல் இருப்பிடம் மற்றும் பெரிய கைதேர்ந்தவர்களால் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதங்கள் ஆகிய எதுவாக இருந்தாலும் மக்களை பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதித்தல் வேண்டும்.
சட்டஆட்சி எல்லைகள், மரபுகள், பின்பற்றப்படும் வணிக நடைமுறைகள் போன்றவற்றில் உள்ள வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் ஒப்பந்தங்களை (இலக்கமுறை, சுய-செயல்படுத்துதல், நியாயமான மிடுக்குடைய ஒப்பந்தங்கள்) செய்ய கருவிகள் மக்களை அனுமதிக்க வேண்டும். எர்கோ இங்கே உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஆயிரக்கணக்கான சிறு கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட தொழில்முனைவோர் உலகெங்கிலும் உள்ள ஆரோக்கியமான மற்றும் நிலையான செல்வ வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவர்கள், எனினும் இரண்டு பெருநிறுவனங்கள் கடலோர புகலிடங்களில் லாபத்தை மறைத்து வைத்திருக்கின்றன.
சமூகங்கள், கூட்டுறவு கூட்டமைப்புகள், இலாப நோக்கற்ற அடித்தளங்கள் மற்றும் மக்களை நேசிக்கும் தன்மை உடைய அறக்கட்டளைகள் ஆகியவற்றின் பயன்பாடு மற்றும் ஒருங்கிணைப்பைக் கருத்தில் கொள்வோம்.
அடிமட்ட நிதியை உருவாக்க முயற்சிப்போம்
ஆம், பல விஷயங்களை உருவாக்க உருவாக்க முடிந்தாலும் இந்த இலக்கை மறந்துவிடக் கூடாது. ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் மதிப்பை உருவாக்கவும், சாதாரண மக்களைப் பாதுகாக்கவும் உதவும்.
முதல் பிட்காயின் தொகுதி (ஜெனிசிஸ் பிளாக் என அறியப்படுகிறது) 03/01/ 2009-இல் "தி டைம்ஸ் ஒரு செய்தியை வெளிப்படுத்துகின்றது அதாவது வங்கிகளுக்கான அதிபர் இரண்டாவது பிணை எடுப்பின் விளிம்பில் உள்ளார் என்று,
பிட்காயினை உருவாக்கியவரும் முதல் வேலை செய்யும் பிளாக்செயினைக் கண்டுபிடித்தவர் தனது அடையாளத்தை மறைக்க. சடோஷி நகமோட்டோ எனப்படும் நாம் அனைவரும் நன்கறிந்த புனைப் பெயரினைத் தேர்ந்தெடுத்தார்.
இந்தத் தடையானது பிட்காயின் இன் ஆரம்ப தொழில்நுட்பம் மற்றும் நிதி கண்டுபிடிப்புகளின் சகாப்தத்தின் தொடக்கம் ஆகிய இரண்டிலும் நேரமுத்திரையிட்டது. எளிமையாகச் சொன்னால், இது பெரிதாக்கப்பட்ட புரட்சிக்கு முழுமையான ஒரு ஊக்கியாக இருந்தது.
அதிகாரப் பரவலாக்கம் என்பது அரசியல், தொழில்நுட்பம் ஏகபோக அதிகாரங்களை மாற்றும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. உலகளவில் மதிப்பை மாற்றுவதற்கான இடைத்தரகர்கள் அல்லது மேற்பார்வையின் தேவையின்றி அமைப்புகள் அமைக்கப்படலாம்.
யார், எப்படி, எப்போது ஒருவருக்கொருவர் மதிப்பை பரிமாறிக்கொள்ளலாம் என்பதைத் மக்கள் தாங்கள் பயன்படுத்தும் நாணயத்தைத் தேர்வுசெய்து, தீர்மானிக்கலாம்.
P2P வர்த்தகத்தின் யோசனையைச் சுற்றி ஒரு முழுத் தொழில்துறை உருவானது. திறந்த, எல்லையற்ற மற்றும் பாதுகாப்பான பூமியின் சராசரி குடிமகனுக்கு செழிப்புக்கான கருவிகளை வழங்குகின்றன. P2P வர்த்தகத்தின் யோசனையைச் சுற்றி ஒரு முழுத் தொழில்துறை உருவானது. அதனுடைய திறந்த, எல்லையற்ற மற்றும் பாதுகாப்பான வழிமுறை பொருளாதாரத்தை சமன் செய்வதற்கான வழிமுறைகளை நிரூபிக்க முடியும் மற்றும் பூமியின் சராசரி குடிமகனுக்கு செழிப்புக்கான கருவிகளை வழங்குகின்றன.
2017 இன் ICO வில் இருக்கும் ஆர்வத்தினால் கணிசமாக கிரிப்டோ சந்தைகளின் மனநிலை மாறியது அதற்கு பிறகு பிணை எடுப்புகள், அச்சிடுதல் மற்றும் தூண்டுதல் ஆகியவற்றைக் கொண்டாடுவதற்கு ஒட்டுமொத்த இடமும் வந்திருப்பதாகத் தெரிகிறது.
ஆம், சில பெருமளவிலான விலை நிர்ணய ஆதாயங்கள் அதிக மிகைப்படுத்தப்பட்ட சந்தைப்படுத்தல் மூலமாக பெறப்படுகின்றது இருப்பினும் இது சைபர்பங்க்ஸின் இலக்குகளின் அசல் நோக்கமாகத் தெரிகிறது.
சராசரி மனிதன் ஒருவனுக்கு கருவிகள் மற்றும் கையாளுதிறன் தேவை. தற்போது சந்தை நிலவரம் பின்வருமாறு காணப்படுகின்றது, மிகைப்படுத்தப்பட்ட சந்தைப்படுத்தலின் மூலமாக புதிய பயனாளர்களை எவ்வாறு கவர்ந்து இழுப்பது மற்றும் புதிய பயனாளர்களை கவர்ந்து உண்ணும் அளவிற்கு இது கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஒன்று கிரிப்டோகரன்சி யை ஒரு பயனுள்ள கருவியாக பயன்படுத்த வேண்டும்.
சந்தையின் தற்போதைய நிலை சற்று வருத்தமாக உள்ளது. நாம் மீண்டும் வேர்களுக்குச் செல்ல வேண்டும்
கிரிப்டோ-புரட்சி, பரவலாக்கப்பட்ட கருவிகள் தனிப்பட்ட மற்றும் பாதுகாப்பானவை மற்றும் இந்த அமைப்புகளை நிஜ உலக தத்தெடுப்பல்இயக்குகின்றன. மக்கள் மதிப்பை உருவாக்க உதவும் கருவிகளை உருவாக்குவதே சிறந்ததாகும்.
அசலான பிணையெடுப்புகளில் இருந்து உலகப் பொருளாதாரம் மேம்படவில்லை தனியுரிமை மற்றும் பாதுகாப்பைச் சுற்றியுள்ள மையக் கதை எப்போதும் உணர்ச்சிகரமான உச்சநிலையில் விளையாடுகிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன்; எவ்வாறாயினும், பொருளாதாரம் சீர்குலைந்தால் எரிக்கப்படுவது சாதாரண மனிதர்கள்தான் என்பது உண்மை.
ஒரு நொடி யோசித்துப் பாருங்கள்.
பெருநிறுவனங்கள் வெளிநாட்டு சந்தைகள் மற்றும் வெளிநாட்டு கடன்களுக்கான நிறுவனங்களின் அணுகலை கொண்டுள்ளன. பொருளாதாரச் சிக்கல்களைச் சரிசெய்யவும், அவற்றைத் தவிர்க்கவும் அவர்களிடம் பல கருவிகள் உள்ளன. குற்றவியல் நிறுவனங்களைப் பொறுத்தவரை, அவை பொதுவாக பொருளாதார கஷ்டங்களிலிருந்து பயனடைகின்றன மற்றும் கடினமான நேரங்கள் சுய மருந்துகளை இயக்குகின்றன. பெரிய குற்றவாளிகள். சிண்டிகேட்டுகள் அடிப்படையில் இறக்குமதி/ஏற்றுமதி வணிகங்கள் நடத்துகின்றனர்.அவர்கள் வெளிநாட்டு நாணயத்திற்கான அணுகலைக் கொண்டுள்ளனர், பெரும்பாலும் கறுப்புச் சந்தை நாணயப் பரிமாற்றங்களை நடத்துகின்றனர், மேலும் இந்த சர்வதேச அணுகலை லாபத்திற்காகப் பயன்படுத்துகின்றனர்.
பொருளாதார நெருக்கடியின் போது பயங்கரவாத அமைப்புகள் பயனடைகின்றன. நம்பிக்கையற்ற உணர்விலிருந்து நீதியான கோபம் போன்ற ஒன்று ஒரு நபரை வன்முறையை நோக்கித் தூண்டுகின்றது. பயங்கரவாத அமைப்புகள் குழப்பம் நிறைந்த பகுதிகளில் செழித்து வளர்கின்றன, இது அவர்களின் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு உத்திகளாகும்.
நமது உலகில் உள்ள செல்வந்தர்கள் பெரும்பாலும் சர்வதேச அளவில் ஒதுக்கப்பட்ட பணத்தினை கொண்டுள்ளனர். அவை ஒப்பீட்டளவில் இலகுவானது மற்றும் சந்தை அணுகல், வரி புகலிடங்கள் போன்ற ஒழுங்கு, வழிமுறைகள் மூலம் ஓட்டைகள், மற்றும் செலாவணி விகிதத் சமநிலை சிரமங்களைத் தவிர்க்கலாம்.
துருக்கி நாடு சமீபத்தில் செய்தி ஒன்று வெளியிட்டது. கடுமையான நெருக்கடியில் இருக்கும் பொருளாதாரங்களுக்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன என்றும், துருக்கிய மத்திய வங்கிகள் சமீபத்தில் கிரிப்டோகரன்சிகளை பணமாக செலுத்த தடை செய்தனர் மேலும் அவை சராசரி குடிமகனுக்கு பயனளிக்கவில்லை.
2010 இல் டாலருக்கு லிராவின் அந்நிய செலாவணி விகிதம் 1.14 ஆக இருந்தது, தற்போதைய மாற்று விகிதம் 8.50 ஆக உள்ளது. அதாவது வாங்கும் திறனில் 86.5882% குறைவு ஏற்பட்டுள்ளது.
நீங்கள் ஒரு துருக்கியர் என்று கற்பனை செய்து பாருங்கள்; ஒருவேளை நீங்கள் சம்பாதிப்பதற்கும் சேமிப்பதற்கும் வாழ்நாள் முழுவதும் நேரத்தையும் உழைப்பையும் செலவு செய்திருப்பீர்கள். ஆனால் ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலப்பகுதியில், உங்கள் பண மதிப்பில் 86% க்கும் அதிகமானவைகளை இழந்து இருப்பீர்கள்.
வருத்தமான விஷயம் என்னவென்றால், துருக்கியில் பிளாக்செயின் பயன்படுத்தக் கூடியதாக இருந்தது. ஆனால், அதற்கு காவலில் இருந்த காவலாளிகள் தங்கள் பதவியை துஷ்பிரயோகம் செய்தனர்.
பதவியை துஷ்பிரயோகம் செய்பவர்களிடமிருந்து முடிந்தவரை அமைப்புகளை பாதுகாப்பற்றதாக மாற்றுவது மிகவும் முக்கியமானது. அதன்மூலம் மக்களையும் பாதுகாக்கலாம் இத்தொழில் நுட்பத்தில் ஏற்படும் தோல்வி மற்றும் மையப்படுத்தப்பட்ட பிளாக்செயினில் வரும் ஆபத்துக்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சாதாரண மக்களுக்கு உண்மையிலேயே பரவலாக்கப்பட்ட கருவிகள் தேவை, அதன்மூலம் பிளாக்செயின் பயங்கரமானது அல்ல என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று அவர்கள் நம்பலாம்
பூமியில் உள்ள பெரும்பாலான அதிகார வரம்புகளைப் போலவே, ஒவ்வொரு நாட்டின் சராசரி குடிமகனுக்கும் பணவியல் கொள்கையின் மீது பூஜ்ஜிய அதிகாரம் உள்ளது. பெருநிறுவனங்கள், குற்றவியல் அமைப்புகள், பயங்கரவாத அமைப்புகள் மற்றும் செல்வந்தர்களிடம் இருக்கும் உத்திகள் சராசரி குடிமகனுக்கு இல்லை. இப்போது பணத்தை பணயக் கைதிகளாக வைத்திருக்கும் அதே சக்திகளால்தான் நிதிச்சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டன. அவர்களே அதனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் மற்றும் நிதிச் சிக்கல்களில் இருந்தும் பயனடைய வேண்டும்.
உண்மையில், படகு மூழ்கும்போது மேலே இருப்பவர்கள் எப்போதும் உயிர்காக்கும் படகைப் பெறுகிறார்கள், அதே சமயம் கீழே இருப்பவர்கள் கப்பலுடன் கீழே செல்கிறார்கள் அதே போல் உயிர்காக்கும் படகைப் வைத்திருப்பது செல்வந்தர்கள் சாதாரண மக்கள் நீரில் மூழ்குகிறார்கள். இது துருக்கிக்கு மட்டும் அல்ல தற்போது உலகளாவிய நிகழ்வாக உள்ளது.பணப்பங்கீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் அது மிகவும் தெளிவாக தெரிகிறது பார்க்கும்போது தெரிகிறது.
இது ஒரு K வடிவ பொருளாதாரமீட்சி.
மையப்படுத்தப்பட்ட நிரல்படுத்தக்கூடிய இலக்கமுறை பணம், தற்போதுள்ள பண உள்கட்டமைப்புக்கு திறமையான தொழில்நுட்ப மேம்படுத்தல் போல் சில பகுதிகளில்செயற்பட்டு இருக்கலாம். இருப்பினும், பணத்தின் அடிப்படைக் கட்டமைப்புகள் சராசரி மனிதனுக்கு எதிராக பணத்தை மேலும் ஆயுதமாக்கும் சகாப்தத்தின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. தற்போதைய நிர்ணய அடிப்படையிலான பணவியல் அமைப்புகள் நிலையான பணவீக்க அழுத்தங்களை உருவாக்குவதன் மூலம் சாதாரண குடிமக்களை தாக்குகின்றன.
இது மத்திய வங்கி அச்சடிப்பு, பண தலையீடு மற்றும் மத்திய அரசுகளின் நிதி வரவு செலவுத் திட்டங்களின் தவறான நிர்வாகம் ஆகியவற்றின் நேரடி விளைவு ஆகும்.
இதன் விளைவாக உருவான பணவியல் கொள்கையானது சராசரி உலக குடிமக்களுக்கு வாழ்க்கைச் செலவை நிரந்தரமாக உயர்த்துவதன் மூலம் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. உயர்பணமாக்குதல் என்பது கிட்டத்தட்ட ஒவ்வொரு சொத்து வர்க்கமும் ஒரு நிதிக் கருவியாக மாறியுள்ளது, இது பணத்தினை உருவாக்குவதற்கான வழிமுறையாகப் பயன்படுத்தப்படுகிறது இது உலக அளவில் செல்வச் சமத்துவமின்மையைத் தூண்டியுள்ளது. வரலாற்றில் இல்லாத அளவிற்கு பதிவுசெய்யப்பட்ட உலகக் கடன்களின் பணவீக்கம்.
உண்மை என்னவென்றால், பல நுகர்வோர் பெரிய எண்கள் தான் அதிக செல்வத்திற்கு சமமாக இருக்கும் என்று நம்புகிறார்கள். இதனால் நாணயத்தின் வாங்கும் திறன் குறைந்து வருகிறது என்பதே உண்மை. உங்கள் வீட்டின் மதிப்பு இரட்டிப்பாகவில்லை; உங்கள் பணத்தில் பாதி வீடு தான் வாங்க முடிகின்றது. உலக ஊதிய பணவீக்க அழுத்தங்களை நடுத்தர மற்றும் கீழ் வகுப்பினர் சமன் செய்யவில்லை. இதன் விளைவாக சராசரி நுகர்வோர் மீதான தனிப்பட்ட கடன் மற்றும் பண அழுத்தத்தில் மேலும் அதிகரிப்பு உள்ளது
மத்திய வங்கி இலக்கமுறை நாணயங்களுக்கு மாற்றத்தை செயல்படுத்தத் தொடங்கும் போது, அவர்கள் நாணயத்தின் வரலாற்றுக் கொள்கைகளை மறுவரையறை செய்வதில் பணம் ஆயுதமாக்கப்பட்டு சமூகக் கட்டுப்பாட்டின் கருவியாக மாற்றப்படும் என்று நான் அஞ்சுகிறேன்.
நிராகரிக்க வேண்டிய பணத்தை ஏற்றுக்கொள்வதைத் தடுக்க மூன்று குறிப்பிட்ட புள்ளிகளைக் கவனிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
முதலாவதாக, நிரல்படுத்தக்கூடிய பணத்தின் காலாவதி தேதியைக் கொண்டிருக்கும் திறன் அல்லது CBDCயை வலுக்கட்டாயமாக அழிக்கும் மத்திய அதிகாரங்களின் திறன். இது மிக உயர்ந்த அளவிலான திருட்டை உருவாக்குகிறது இலக்கமுறை சொத்து பறிமுதல் போன்ற சில விதிமுறைகளை நாம் கேட்கலாம்; இருப்பினும், இந்த அளவிலான மையப்படுத்தப்பட்ட அதிகாரம் குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான அதிகார சமநிலையை என்றென்றும் மாற்றிவிடும்.
இரண்டாவது, ஒரு சமூகத்திற்குள் ஒரு குடிமகனின் சமூக அந்தஸ்துடன் கடன் செலுத்தும் திறனை மையப்படுத்தப்பட்ட சக்தியின் ஆகும். எளிமையாகச் சொன்னால், இது கருத்து வேறுபாடுகளுக்கு எதிராக பணத்தை ஆயுதமாக்குகிறது. எந்தவொரு சுதந்திரமான சமூகத்திலும் ஒரு குடிமகன் கருத்து வேறுபாடு கொள்ளும் நிலை பொதுவாக ஒரே சட்ட வழிமுறையாகும்
திறன் இல்லாத சமூகம் சுதந்திரமாக இல்லை என்பதனால் கருத்து வேறுபாடு இல்லாமல் அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மையப்படுத்தப்பட்ட அணுகல், பயனளி வழிமுறைகள் அல்லது இலக்கமுறை பண நாணயத்திற்கு இணங்குதல் ஆகியவை சிந்தனை, மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக பணத்தை ஆயுதமாக்குகிறது.
பார்க்க வேண்டிய இலக்கமுறை பணத்தின் மூன்றாவது அம்சம், குறிப்பிட்ட சந்தைப் பகுதிகளில் கிரெடிட்டை தடைசெய்யும் அல்லது கட்டுப்படுத்தும் திறன் ஆகும். இது பணத்தின் இறையாண்மைக்கே சவால் விடுகிறது. கூட்டு சமூக ஒப்பந்தம் பொதுவாக உங்கள் பணம் உங்களுடையது. இது உங்கள் சொத்து, நுகர்வோர் தங்கள் செல்வத்தை செலவழிப்பதற்கான வழிகளை கட்டுப்படுத்துவது நாம் அனைவரும் எதிர்க்க வேண்டிய ஒரு விடயமாகும். குறிப்பிட்ட சந்தைகள், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வழிகளை சட்டப்பூர்வமாக்குவது தடுக்கப்பட்டாலும், பணமானது ஆட்சித் தலைமை உரிமையாகவே உள்ளது. இந்த சுதந்திரத் கருத்து மதிக்கப்பட வேண்டும். ஒரு சுதந்திர சந்தை கருத்தாக்கத்தை தடை செய்யும்.
தனிமனிதனைப் பாதுகாக்க தனியுரிமை அவர்கள் விருப்பமாக இருக்க வேண்டும், அது கட்டாயப்படுத்தப்பட வேண்டியதில்லை; மக்கள் தங்கள் சொந்த தேர்வுகளை செய்ய வேண்டும்.
தனியுரிமை என்பது தனிநபருக்கு ஒரு இடத்தை உருவாக்க தடைகளை உருவாக்கி எல்லைகளை அமைக்கும் திறன் ஆகும். எந்த எல்லைகள் மற்றும் எல்லைகளை உருவாக்குவது என்பது ஒவ்வொருவருக்கும் உள்ளது.
நாகரிகம் என்பது சமூகத்திற்கு எது சிறந்தது மற்றும் தனிநபருக்கு எது சிறந்தது என்ற தொடர்ச்சியான பதற்றத்தின் கீழ் உள்ளது. ஒரு சமூகத்தில் உள்ள ஒரே நிலையான நிறுவனங்கள் தனிநபர்கள், மேலும் அனைத்து கூட்டுசங்கங்கள் மற்றும் அரசாங்கங்களின் தனிப்பட்ட பங்கேற்பு மற்றும் தொடர்புகளிலிருந்து உருவாகின்றன.
தனியுரிமை தனிப்பட்ட சுயாட்சியை அனுமதிக்கும் இடத்தை உருவாக்குகி தனிமனிதனை சமூகத்திலிருந்து பாதுகாக்கிறது. தனிப்பட்ட சுயாட்சி என்பது தனிமனித உரிமைகளின் அடிப்படையாகும்.
தனியுரிமை தனிநபர்கள் வற்புறுத்தலின்றி முடிவுகளை எடுக்க அனுமதிக்கிறது. ஒரு சுதந்திர சமூகத்தில் நிதி மற்றும் தனிப்பட்ட தனியுரிமை வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகும். தனிப்பட்ட தகவல்கள் தவறான கைகளில் இருக்கும்போது கட்டுப்பாடு மற்றும் கையாளுதலுக்கான சக்திவாய்ந்த கருவியாகப் பயன்படுத்தப்படலாம்.
சுதந்திர சமூகங்களில் உள்ள தனிநபர் எல்லை, தனிப்பட்ட உண்மை, அரசாங்க ஈடுபாடு, கடுமையான மேற்பார்வை மற்றும் கட்டுப்பாடு இல்லாமல் இருக்க வேண்டும். நமது உலகில் தற்போதைய தொழில்நுட்பப் போக்குகள் ஒருவரின் தனிப்பட்ட இடத்தில் கணிசமாக ஊடுருவுகிறது
தனிநபர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் நிதி வாழ்க்கையைப் பற்றிய தகவல்களை கையாள கூடியவர்களைக் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்
தனியுரிமை என்பது நம்பிக்கைக்குரிய விஷயம், தற்போது தனியுரிமை இல்லாதது நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது மக்கள் மத்தியில், நம்பிக்கையின்மை ஆரோக்கியமான சமூகத்தின் அடித்தளமாக இருக்க முடியாது. ஆரோக்கியமான சமூகங்கள் ஒத்துழைப்பின் மீது கட்டமைக்கப்படுகின்றன, மேலும் தன்னார்வ ஒத்துழைப்பு என்பது நம்பிக்கையின் ஒரு பயிற்சியாகும்.
தனியுரிமை என்பது உங்கள் அறிவு/ஒப்புதல் இல்லாமல் உங்கள் குழுக்கள் தரவை எடுக்க முடியாது மற்றும் அவர்களின் தேவைக்காக இந்தத் தகவலைப் பயன்படுத்த முடியாது
நிதித் தனியுரிமை மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது ஒரு சர்வாதிகார அரசாங்கத்தைக் கொண்ட நாட்டில் எதிர்க் குழு உயிர்வாழ்வதற்கும் முறையாக அடக்குவதற்கும் உள்ள வித்தியாசமாக இருக்கலாம். தனியுரிமை இல்லாததால், ஒடுக்குமுறை ஆட்சிகளின் அச்சுறுத்தலின் கீழ் சமூகத்தில் தனிநபர்களுக்கு உயிர்வாழ வழி இல்லை. மனித வரலாற்றில் எத்தனை முறை மத, அரசியல் அல்லது பழங்குடி மோதல்கள் அதிகாரத்தில் உள்ள ஒரு குழு, மற்றொரு சக்தி குறைந்த குழுவின் செல்வத்தை வலுக்கட்டாயமாக எடுத்துக் கொள்ள வழிவகுத்தது? நிதிச் சொத்துகளைக் கைப்பற்றுவது சர்வாதிகார கட்டுப்பாட்டாக எத்தனை முறை பயன்படுத்தப்படுகிறது?
துல்லியமாக இந்த காரணத்திற்காக, பல வணிகங்கள், எதிர்ப்பாளர்கள் மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் அவர்கள் செயல்படும் நாடுகளுக்கு வெளியே கணக்குகளை பராமரிக்கின்றன.
அரசியல், இன, மத அல்லது “வெறும்” பொருளாதார காரணங்களுக்காக ஒரு அரசாங்கம் அதன் குடிமக்களின் செல்வத்தை பறிமுதல் செய்ய முயற்சிக்கும் போது, மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை பாதுகாக்க நிதி தனியுரிமை அனுமதிக்கும். சுதந்திரத்திற்கு நிதித் தனியுரிமை முக்கியமானது, மேலும் பல அரசாங்கங்கள் தனிப்பட்ட நிதித் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தத் தயாராக உள்ளன.
எர்கோ பிளாக்செயினின் குறிக்கோள் பணிச்சூழலியல் பணத்தை உருவாக்குவதாகும்.
பணிச்சூழலியல் என்பது மனிதர்கள் மற்றும் ஒரு அமைப்பின் பிற கூறுகள் மற்றும் தொழில் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளைப் புரிந்துகொள்வதில் அக்கறை கொண்ட அறிவியல் துறையாகும்.
நேரத்திற்கு நேரம் பொருளாதார நிலைகள் வேறுபடுகின்றன, மேலும் நிதிக் கருவிகளைக் கொண்டவர்கள் சாதாரண செல்வத்திலும் மதிப்பிலும் அழிவை ஏற்படுத்துகின்றனர். இது பணிச்சூழலியல் அல்ல; இது கொள்ளையடிக்கும் மற்றும் ஏகபோகமானது, மேலும் எங்களுக்கு சிறந்த செயற்படுத்த கருவிகள் தேவை.
இப்போது இருக்கும் போட்டி மத்திய சக்திகளை சீர்குலைக்கும், அது நிச்சயமாக துருக்கியின் விஷயத்தில் அவ்வாறுதான் செயல்பட்டது. எனவே தனிப்பட்ட, மீள்தன்மை, தணிக்கை-எதிர்ப்பு, பாதுகாப்பான, திறந்த மற்றும் இலவச கருவிகள் இருக்க வேண்டும்.
ஒருவேளை நீங்கள் ஒரு வளர்ந்த சமுதாயத்தில் வாழ்கிறீர்கள், என்று நினைத்தால் அது நன்றாக இருப்பதாக நினைக்கலாம்; ஆனால் மத்திய வங்கிகள் நமது பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை செலுத்துகின்றன. கப்பல் மூழ்காத அளவுக்குத் தண்ணீரை மத்திய வங்கிகள் பிணை எடுக்கின்றன. நீங்கள் சொல்வது சரி என்று நான் நம்புகிறேன், ஆனால் நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நான் பயப்படுகிறேன்.
ஏனென்றால் நாம் உருவாக்கும் கருவிகள் இன்று உங்களுக்குப் பயனளிக்காமல் போகலாம், தவறில்லை, அவை நாளைய வாழ்க்கைப் படகாக இருக்கலாம். கிரிப்டோகரன்சியின் நோக்கமும் எனது வாழ்க்கையின் நோக்கமும் இதுதான்.
கிரிப்டோகரன்சி என்பது குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கான ஒரு கருவி என்று சொல்லத் துணியும் எவரும், அத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் முன், இந்த அமைப்புகளுக்கு எவ்வாறு நிதியளிக்கப்படுகிறது, பாதுகாக்கப்படுகிறது மற்றும் அவற்றின் விநியோகச் சங்கிலிகளை எங்கே வரைகிறது என்பதைத் தேட முயற்சிப்பதில்லை. பெரும்பாலும் கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் அவர்களிடம் சிக்கி அதிலிருந்த விலக அவதிப்படுகிறார்கள். இந்த பொருளாதார துஷ்பிரயோக சுழற்சியை உடைக்க வேண்டும்.
பணிச்சூழலியல் பணத்தின் குறிக்கோள் அனைத்து மக்களுக்கும் பணம் மற்றும் நம்பகமான ஒப்பந்தங்களை உருவாக்குவதாகும். நாம் உருவாக்கும் கருவிக்கு அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய தேவையாக உள்ளது.
இந்த பகுதியில், பணிச்சூழலியல் பணத்தை உருவாக்க பின்பற்ற வேண்டிய முக்கிய கொள்கைகளை நாங்கள் வரையறுக்கிறோம்.
இதனை “எர்கோவின் சமூக ஒப்பந்தம்” என்று குறிப்பிடப்படலாம்.
இந்த கொள்கைகளில் ஏதேனும் வேண்டுமென்றே மீறப்பட்டால், அதன் விளைவாக வரும் பிரச்சனைகளை எர்கோ ஏற்றுக்கொள்ளப்படாது.
எப்போதும் பரவவும் வளரவும் முயற்சி செய்யுங்கள். எந்தவொரு கட்சியின் சமூகத் தலைவர்கள், மென்பொருள் உருவாக்குநர்கள், வன்பொருள் உற்பத்தியாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் நிதிகள் தோல்வியின் மையப் புள்ளிகளைத் தவிர்க்க வேண்டும். அமைப்பின் செயல்பாட்டை சீர்குலைக்கும் அனைத்து நபர்களுக்கு இடையூறு ஏற்பட்டால் அதற்கான அவசர திட்டங்களை வைத்திருக்க வேண்டும். எனவே, முடிந்தவரை பரவலாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
அதிகாரப் பரவலாக்கம் கல்வி மற்றும் தத்தெடுப்பில் இருந்து கிடைக்கின்றது. நாம் உருவாக்கும் கருவிகளுக்கு ஆவணங்கள் தேவை; சமூகத்தின் அதன் வளர்ச்சியை காட்ட வேண்டும். கருவிகளைப் பயன்படுத்தவும் மாற்றியமைக்கவும் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். இணையம் என்பது பரவலாக்கத்தின் சக்திவாய்ந்த இயக்கி மற்றும் கற்பிப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். பரவலாக்கம் வளர்ச்சி மற்றும் இணையதள பயனர் பக்கங்களில் இரண்டு கிடைக்கின்றது.
வலையமைப்பின் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடிய தீங்கிழைக்கும் நடத்தை தவிர்க்கப்பட வேண்டும்.
எர்கோவின் வாழ்நாளில் இந்தக் கட்சிகள் ஏதேனும் தோன்றினால், அவற்றின் தாக்க அளவைக் குறைப்பதற்கான வழிகளை சமூகம் கருத்தில் கொள்ள வேண்டும். தங்கள் அதிகாரத்தை சீர்குலைக்கவும், சாதகமாகப் பயன்படுத்தவும், தவறாகப் பயன்படுத்தவும், துஷ்பிரயோகம் செய்யவும் முயல்பவர்கள் எப்போதும் இருப்பார்கள். வலுவான ஒத்துழைப்பு மூலம் வலுவான சமூகம் பிறக்கிறது எனவே கல்வி. பயனர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், தீங்கிழைக்கும் நபர்களை அடையாளம் காணவும், அவர்களைத் தவிர்க்கவும், அவர்களின் செல்வாக்கைக் குறைக்க ஒன்றாகச் செயல்படவும். அனைத்து சமூக உறுப்பினர்களும் தொடர்ந்து கற்றுக்கொள்ளவும், கருவிகளைப் பின்பற்றவும், மற்றும் கற்பிக்கவும் ஏதாவது ஒரு வழியில் முயற்சி செய்ய நான் ஊக்குவிக்கிறேன்.
எர்கோ புரோட்டோகால் எந்த வகைப் பயன்பாட்டையும் கட்டுப்படுத்தாமல் தொடர்ந்து நிலைத்திருக்க அது அவசியம். இதனால் நாம் ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் மனித விழுமியங்களை ஆதரிக்க முடியும்; இருப்பினும், நாங்கள் அவற்றைச் செயல்படுத்துவதில்லை, அதற்கு ஒரு மைய அதிகாரம் தேவைப்படும்.
தங்களின் விண்ணப்பத்தின் நெறிமுறைகள் மற்றும் சட்டப்பூர்வமான தன்மைக்கு முழுப் பொறுப்பையும் ஏற்று, அவர்கள் விரும்பும் எந்த தர்க்கத்தையும் செயல்படுத்த அவர்களால் மட்டுமே முடியும்.
முக்கிய நெறிமுறைக்கான அனைத்து குறியீடுகளும் முழுமையாக திறந்த மற்றும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வரியும் முழுமையாக மேற்பார்வை செய்யக்கூடியதாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும், கையாளுதலைத் தடுக்கிறது மற்றும் பரவலாக்கப்பட்ட பின்னடைவை உருவாக்குகிறது. Ergo நம்பிக்கையுடன் இருக்க ஓப்பன் சோர்ஸாக இருப்பதற்கு முழுமையாக உறுதிபூண்டுள்ளது, மேலும் அந்த நம்பிக்கை முழுமையாக சரிபார்க்கப்பட வேண்டும்.
எர்கோ எவரும் வலைத்தளத்தில் சேரலாம் மற்றும் அனுமதியின்றி நெறிமுறையில் பங்கேற்கலாம். பாரம்பரிய நிதி அமைப்பைப் போலன்றி, நெறிமுறையின் முக்கிய மட்டத்தில் பிணை எடுப்புகள், தடுப்புப்பட்டியல்கள் அல்லது வேறு வகையான பாகுபாடுகள் சாத்தியமாகாது, மேலும் இதனால் உள்நாட்டின் நன்மைகள் குறைக்கப்படும்.
எர்கோ தனியுரிமையை ஆதரிப்பதில் உறுதியாக உள்ளது. அவற்றைப் பயன்படுத்த விரும்புவோருக்கான கருவிகள் ,ஒரு பயனர் தங்கள் அதிகாரத்தின் எல்லைக்குள் தரவுகளின் பொது கிடைக்கும் தன்மையை முற்றிலும் சீர்குலைக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்த விரும்பினால், இது ஒரு தன்னார்வத் தேர்வாக இருக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளின் நெறிமுறைகள் மற்றும் சட்டபூர்வமான தன்மைக்கு அவர்கள் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
எர்கோ சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உறுதியளித்துள்ளது. வலையமைப்பு தாக்குதல்களைத் தடுப்பதற்கும், தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும், ஆன்-செயின் மதிப்பைப் பாதுகாப்பதற்கும் இது ஒரு தொடர்ச்சியான அர்ப்பணிப்பாகும்.
எர்கோ வழக்கமான நபர்களுக்காக உருவாக்கப்பட்டத வழக்கமான ஒரு கருவியாக இருக்க வேண்டும். எர்கோ என்பது சாதாரண மக்களுக்கான ஒரு தளம் ஆனால் அது பெரிய கட்சிகளுக்கு ஆதரவாக அவர்களின் நலன்களை மீறக்கூடாது. குறிப்பாக, சுரங்கத்தை மையப்படுத்துவது தடுக்கப்பட வேண்டும் என்பதே இதன் பொருள். வழக்கமான நபர்களை இயக்குவதன் மூலம் நெறிமுறையில் பங்கேற்க முடியும் முழு முனை மற்றும் சுரங்கத் தொகுதிகள். உத்தியோகம் செய்யுமிடம், தானே அழிதல், போன்ற V1 எர்கோ சிறு சிறு துண்டங்களாகக் விகித விநியோகத்தை வழங்க வேலை செய்யும்.
வழக்கமான மக்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்ட கருவிகளை வழங்கும் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க எர்கோ உறுதி அளித்துள்ளது. இணையர் பரிமாற்றம், இணைய மத்திய சக்தி பரிமாற்றம், மூலம் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறது, மேலும் எர்கோ சாதாரண மக்களுக்கு அதிகாரம் அளிக்க கருவி மற்றும் சமூகக் கல்வியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எர்கோ என்பது அதன் மேல் கட்டப்பட்ட பயன்பாடுகளுக்கான அடிப்படை ஆகும். இது பல பயன்பாடுகளுக்கு ஏற்றது, ஆனால் அதன் முக்கிய கவனம் நிதி ஒப்பந்தங்களை செயல்படுத்த திறமையான, பாதுகாப்பான மற்றும் எளிதான வழியை வழங்குவதாகும். எனவே எர்கோ நம்பகத் தன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தப் பணத்தின் குறிக்கோள், தொடர்ந்து மேம்படுத்தும் மற்றும் புதுமைப்படுத்தும் உறுதியான அடித்தள வலையமைப்பை உருவாக்க இயலாத ஒரு அமைப்பை உருவாக்குவதாகும்.
அதிக பயனர் செலவுகள் மற்றும் கட்டணங்களால் மீறப்படாத ஒரு அமைப்பை உருவாக்குவதாகும். பணம் பணிச்சூழலியல் செலவு-போட்டியாக இருக்க வேண்டும். பயன்பாடு மற்றும் மக்கள் ஒப்பந்தப் பணத்தை அதிகரிக்க மற்றும் செயல்படுத்துவதற்கான கட்டமைப்புகள் உருவாக்க Ergo கருவி உதவும்.
எர்கோ வளர்ச்சியின் அனைத்து அம்சங்களும் நீண்ட கால கண்ணோட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். எர்கோ கிரிப்டோ குளிர்காலத்தில் தொடங்கப்பட்டது; எர்கோ தனிக்குழுவை உருவாக்குபவரின் நோக்கம் மற்றும் குறுகிய கால சந்தை நிலைமைகளை மாற்றியமைக்க வேண்டும். குறுகிய கால பாராட்டுக்கு வருபவர்களும், கொள்கைக்காக வருபவர்களும் எப்போதும் இருப்பார்கள்.
மக்களுக்கான சிறந்த ஒப்பந்தங்கள் என்பது சராசரி நபருக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய ஒரு அமைப்பை வழங்குவதற்கான ஒரு திறந்த மூல கருத்தாகும். நீண்ட காலப் பேழையின் மூலம் மீள்தன்மையுடனும், மாற்றியமைக்கக்கூடியதாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதே அந்த இலக்காகும். எர்கோ ஒரு தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், எர்கோவின் மேல் கட்டமைக்கப்பட்ட பயன்பாடுகளும் நீண்ட காலத்திற்கு இருக்கக்கூடியது. இந்த பின்னடைவு மற்றும் நீண்ட கால உயிர்வாழ்வு ஆகியவை எர்கோவை ஒரு நல்ல மதிப்பாகவும், சாதாரண மனிதனுக்கு உதவுவதற்கான ஒரு பொறிமுறையாகவும் வடிவமைத்துள்ளான்.
என்ன கருவிகளை நாம் சேர்க்கலாம்? நாம் எவ்வாறு மேம்படுத்தலாம்? பிரச்சனைகள் என்ன? அடுத்ததாக நடப்பதற்கு நாம் எவ்வாறு தயாராகலாம்? என்று நாம் எப்போதும் நம் சிந்தனைக்கு அப்பால் பார்க்க வேண்டும், எப்போதும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
எர்கோ உயிர்வாழ்வதற்கு இந்த நீண்ட கால பார்வை ஒருபோதும் அழியாது. கிரிப்டோ குளிர்காலத்தில் எர்கோ பிறந்தார், பலர் ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட அமைப்புகளின் எதிர்காலத்தையும் மதிப்பை உருவாக்கும் திறனையும் நிராகரிக்கத் தொடங்கியுள்ளனர்; இருந்தபோதிலும், நாங்கள் சகித்துக்கொண்டு கட்டியெழுப்பினோம்.
எர்கோ நிலைத்திருக்க வேண்டுமானால், நாம் கொள்கையுடையவர்களாக இருக்க வேண்டும் மற்றும் உறுதியான அடித்தளத்தில் மதிப்பை உருவாக்க வேண்டும். குறுகிய கால உற்சாகத்திற்கான வளர்ச்சி. நல்ல காலமும் வரும் கடினமான நேரமும் வரும் என்று பெரும்பாலும், மக்கள் அதற்காக நீண்ட காலத்தை தியாகம் செய்கிறார்கள்.
அலெக்சாண்டர் செபுர்னாய் (aka Kushti) எர்கோ மேடை இன் முக்கிய உருவாக்குபவர். மேலும் அவர் 2011 ஆம் ஆண்டு முதல் பிளாக்செயின் மேம்பாடு மற்றும் நம்பகமான ஒப்பந்தங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். NXT இன் முக்கிய உற்பத்தியாளராக இருந்த அவர், 2014 இல் செர்ஜி நசரோவுடன் இணைந்து smartcontract.com (இப்போது Chain link) தொடங்கினார். மற்றும் 20 க்கும் மேற்பட்ட கல்வித் தாள்களைக் கொண்ட IOHK ஆராய்ச்சியாளர். Nxt இல் பணிபுரியும் போது, அவர் ‘முற்றிலும் எளிமையான பிளாக்செயின் கட்டமைப்பை’ தொடங்கினார், பின்னர் அது ஒரு தொகுதியான பிளாக்செயின் கட்டமைப்பாக மாற்றப்பட்டது. இந்த திட்டம் 2015 ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தின் நடுப்பகுதியில் சார்லஸ் ஹோஸ்கின்சன், கார்டானோ மற்றும் Ethereum இணை நிறுவனர் ஆகியோரின் கவனத்தைப் பெற்றது. பின்னர் அவர் ஜனவரி 2016 இல் IOHK இல் சேர்ந்தார்.
எர்கோ ஆரம்பத்திலேயே நியாயமான வெளியீட்டைக் கொண்டிருந்தது. இது எந்த ஒரு ஐசிஓவையும் வைத்திருக்கவில்லை, மேலும் தளத்தின் நிறுவனர்களுக்காக முன்- சுரண்டப்பட்ட நாணயங்கள் எதுவும் இல்லை. அதிகாரப் பரவலாக்கம் மற்றும் ஒரு சமனான நாணய முறை, மற்றும் நேர்மை ஆகியவை முதலில் முன்னுரிமையாக இருந்தன. அறக்கட்டளை பொக்கிஷ சாலையால் உருவாக்கப்பட்ட மொத்த நாணயங்களில் 4.37% வை வெட்டியெடுக்கப்பட்டது, மேலும் டோக்கன் பொருளாதாரத்தின் முக்கிய கூறுகளை மாற்ற முடியாது.